1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. SSN Engineering College Suspends New Admissions for 2026-27: Transition Details

சிவநாடார் எஞ்சினியரிங் கல்லூரியுடன் முக்கிய கல்லூரி இணைப்பு.. இனி தனி நுழைவு தேர்வு தான்..!

எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி
தமிழகத்தின் முதன்மை கல்வி நிறுவனமான எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி, வரும் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் புதிய மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த இக்கல்லூரியை படிப்படியாக மூடுவதற்கான ஒப்புதலை நிர்வாகம் பெற்றுள்ளது. இக்கல்லூரி இனி 'சிவ நாடார் பல்கலைக்கழகத்துடன்' முழுமையாக இணைக்கப்பட இருப்பதே இந்த மாற்றத்திற்கு காரணமாகும்.
 
இதுவரை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் 65% மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் இங்கு சேர்ந்து வந்தனர். இனி வரும் காலங்களில், சிவ நாடார் பல்கலைக்கழகம் நடத்தும் தனி நுழைவு தேர்வு மூலமாக மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதனால் பொதுக்கலந்தாய்வு மூலம் குறைந்த கட்டணத்தில் பயிலும் வாய்ப்பு இனி இருக்காது. 
 
தற்போது இக்கல்லூரியில் படித்து வரும் சுமார் 4,800 மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், அவர்கள் படிப்பை முடிக்கும் வரை அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரமும், அதே பேராசிரியர்களின் பயிற்சியும் தொடரும் என்றும் கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
ஓபிஎஸ், டிடிவி கூட்டணிக்குள் வருகிறார்களா? பியூஷ் கோயல் - ஈபிஎஸ் சந்திப்பில் பரபரப்பு..!