1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:29 IST)

இந்த நூற்றாண்டின் சிறந்த பட்ஜெட்: அதானி புகழாரம்

இந்த நூற்றாண்டின் சிறந்த பட்ஜெட்: அதானி புகழாரம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் மாறி மாறி பல்வேறு அரசியல் தலைவர்களிடம் இருந்து வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த பட்ஜெட் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் ஆகியோர்களுக்கு சாதகமான பட்ஜெட் என்றும் குறிப்பாக அம்பானி அதானிக்கு ஆதரவாக இருக்கும் பட்ஜெட் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோல் தொழிலதிபர் அதானி இந்த பட்ஜெட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் 
 
இந்த நூற்றாண்டிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்து உள்ளது என்றும் தற்சார்பு இந்தியா மீதான நம்பிக்கையை தற்போதைய பட்ஜெட் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இந்த பட்ஜெட் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதானி 
 
அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு இந்த பட்ஜெட் சாதகமாக இருப்பதால் அவர் இந்த பட்ஜெட்டை பாராட்டி உள்ளதாக மீண்டும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்