திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2021 - 2022
Written By Sinoj
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (19:26 IST)

2021 –பட்ஜெட்; முதலாளிகளுக்கு ஆதரவு…மக்களுக்கு ஏமாற்றம்- கமல்ஹாசன்

இன்று நாடாளுமன்றத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2021 –பட்ஜெட் பற்றி,நடிகர் கமல்ஹாசன், இது முதலாளிகளுக்கு ஆதரவு…மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2021 பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக் கூறியுள்ளார்.

அதில், மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறத எனத் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்றது முதல், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட எத்தனையோவிதமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. தற்போது மத்திய அரசு  3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது மக்களுக்கு பாதகமாக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் இந்த பட்ஜெட் லாலீ பாப் என விமர்சித்துள்ளார்.

ஆனால் பிரதமர் மோடி, இந்த பட்ஜெட் சிறந்த பெட்ஜெட் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.