வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (07:34 IST)

நேற்றைய பட்ஜெட்டால் என்னென்ன பொருட்களின் விலை குறையும்?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பாக தமிழகம் உள்பட தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப் பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்றைய பட்ஜெட் காரணமாக என்னென்ன பொருள்களின் விலை குறையும் மற்றும் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற தகவல் தற்போது வந்துள்ளது. தங்கம் வெள்ளி பிளாட்டினம் நகைகள் ஆகியவற்றின் விலைகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் செல்போன், செல்போன் சார்ஜர், லித்தியம் பேட்டரி, சோலார் இன்வெர்டர், எல்இடி பல்புகள், வாகன உதிரிப் பொருட்கள் மற்றும் தோல் பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வந்த நிலையில் நேற்றைய பட்ஜெட்டின் தாக்கத்தால் இனி தங்கம் மற்றும் விலை குறையும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்