வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (10:42 IST)

என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - நடிகை பார்வதி

தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழிப்பேன் என மலையாள நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

 
தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட சில படங்களிலும், மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் பார்வதி.  ஒரு படத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியிடம் நடிகர் மம்முட்டி பேசும் வசனத்தை பார்வதி கண்டித்து கருத்து கூற, மம்முட்டியின் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் விமர்சனம் செய்தனர். ஆனால், மம்முட்டியோ அவரின் ரசிகர்களை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தார். ஆனால், பார்வதி அளித்த புகாரின் பேரில் அவரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
 
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் பார்வதியும் ஒருவர்.  
 
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
நான் பிரச்சனையை சந்தித்த போது அதை கண்டும் காணாமல் போகச் சொன்னார்கள். இது போல நிறைய பார்த்திருக்கிறேன். கடந்து சென்று விடு என் மம்முட்டி கூறினார். மேலும், ஒரு இடத்தில் இதுபற்றி பேசிய போது ‘எனக்காக பேச நான் யாரையும் நியமிக்கவில்லை’ என்றுதான் கூறினாரே தவிர, அவரது ரசிகர்கள் கூறியது தவறு என அவர் குறிப்பிடவில்லை. அது எனக்கு வருத்தத்தை கொடுத்தது.
 
சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள்  முடிவுக்கு வர வேண்டும் என்றுதான் பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். அவர்களின் முகத்திரையை தோலுரித்து காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு அந்த வேலையை விரைவில் தொடங்குவேன்” என பார்வதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.