அரசியல் இயக்கத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனி ரஜினி உணர்வார்; செல்லூர் ராஜூ
அரசியலுக்கு வருவதை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், இது காலத்தின் கட்டாயம் என்று கூறினார். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ இது ஐனநாயக நாடு, யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை கூறிய ரஜினி முதலில் மக்கள் பணியாற்றட்டும். அரசியல் இயக்கத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனி அவர் உணர்வார். ஆர்.கே.நகர் தேர்தலில் பல கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டும் திமுகவுக்கு டெபாசிட் காலியாகிவிட்டது. தினகரனின் வெற்றியும் நிரந்தரமானதல்ல, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாகிய மாபெரும் கட்சியான அதிமுகவை ரஜினியால் மட்டுமில்ல வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.