1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (16:44 IST)

காதலில் தோல்வியடைந்த ரஜினி: மனம் திறந்த பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் காதலில் தோல்வியடைந்ததாக மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவில் பேசியுள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இதனையடுத்து நடிகர் ரஜினி குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் அவரே தனது முதல் காதல் குறித்து பேசியது மேலும் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.
 
நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொள்ள மலேசியாவுக்கு சென்ற நடிகர் ரஜினியிடம் மேடையில் வைத்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சுவாரஸ்யமாக பதில் அளித்தார். அப்போது தனது முதல் காதல் குறித்து அவர் மனம் திறந்தார்.
 
எல்லோரையும் போல நானும் காதலில் விழுந்திருக்கிறேன். அது கர்நாடகாவில் எனது பள்ளிக்காலத்தில் ஏற்பட்ட காதல். அதை என்னால் மறக்கமுடியாது. எல்லோருடைய முதல் காதலும் அவர்களது இதயத்தில் பத்திரமாக இருக்கும். எத்தனையோ பேர் அவர்களது முதல் காதலில் ஜெயித்திருப்பார்கள். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் காதலில் நான் தோற்றுவிட்டேன் என்றார்.