பட்ஜெட் 2018-19: மக்கள் எதிர்ப்பார்ப்புகளுக்கு மோடி கூறுவது என்ன??
2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பங்கேற்க வந்த மோடி ஊடங்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, உலக வங்கி, சர்வதேச நிதியகம் உள்ளிட்ட அமைப்புகளின் ரேட்டிங்கும் இந்தியா முன்னேறியுள்ளதாகவே தெரிவிக்கிறது.
எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் பட்ஜெட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அனைத்து தரப்பினர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமாக பட்ஜெட் தாக்கலாகும்.
பட்ஜெட் குறித்து பிரதமர் கூறிய கருத்துக்கள் மக்களின் ஆசையை தூண்டுவதாக இருந்தாலும், பட்ஜெட்டில் உள்ள ஏதிர்ப்பார்ப்புகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.