2 மணிநேரத்தில் மோடி, அதானியை கைது செய்து காட்டுகிறேன்: ஆம் ஆத்மி எம்.பி. சவால்..!
2 மணிநேரத்தில் மோடி, அதானியை கைது செய்து காட்டுகிறேன்: ஆம் ஆத்மி எம்.பி. சவால்..!
சிபிஐ அமைப்பை என்னிடம் ஒப்படைத்தால் 2 மணி நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானியை கைது செய்து காட்டுகிறேன் என ஆம் ஆத்மி எம்பி ஒருவர் சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அமைப்பு கைது செய்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் மணிஷ் சிசோடியா கைதுக்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது என்றும் ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடியும் என்றும் தெரிவித்தார்.
விசாரணை முகாம்களை தவறாக பயன்படுத்தினால் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றும் என்னிடம் சிபிஐ அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை ஆகியிருந்தால் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா தொழிலதிபர் அதானி ஆகியோரை இரண்டு மணி நேரத்திற்கு கைது செய்து காட்டுகிறேன் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran