செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:13 IST)

அஜித் பட ஓப்பனிங் காட்சியை ‘லூப்’ மோடில் பார்த்துக் கொண்டிருந்தேன் – ரசிகருக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் டிவிட்டரில் ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் அஜித் ரசிகர்களைக் குஷியாக்கியது. ஒரு ரசிகர் சந்தோஷ் இசையமைத்த மகான் திரைப்படத்தின் அரியாசானம் பாடலின் கிளிப்பிங்கைப் பகிர்ந்து ‘இந்த பாடலுக்கு இசையமைக்கும் முன்னர் எந்த ட்ரக் எடுத்துக் கொண்டீர்கள்’ என விவகாரமாக கேட்க, அவருக்கு பதிலளித்த சந்தோஷ ‘எந்த ட்ரக்கும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த காட்சியைதான் லூப் மோடில் பார்த்துக் கொண்டிருந்தேன்’ எனக் கூறியுள்ளார். அவர் பகிர்ந்த காட்சி மங்காத்தா படத்தில் அஜித் அறிமுகமாகும் சண்டைக் காட்சி. இது அஜித் ரசிகர்களைக் குஷியாக்க, அந்த ட்வீட்டைப் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகின்றனர்.