டெல்லி மாநகராட்சி கூட்டம்: பாஜக- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் தாக்குதல்..!
டெல்லி மாநகராட்சி கூட்டம்: பாஜக- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் தாக்குதல்..!
டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் ஒருவருக்கு இடையே மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வரும் நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து இரு கட்சி உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலின் மத்தியில் மாநகராட்சி நிலை குழுவின் உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என மேயர் அறிவித்தார். இதனை அடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்ட இரு கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
ஆம் ஆத்மி கட்சியினரை காவல்துறையினர் விரட்டியடித்ததை கண்டித்து அக்கட்சியினர் காவல் துறை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக டெல்லி மேயர் பாஜக வசம் இருந்த நிலையில் சமீபத்தில் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran