தொடர்புடைய செய்திகள்
- உபி உள்பட 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை: பஞ்சாபில் மட்டும் பின்னடைவு
- உ.பியில் சமாஜ்வாடி.. உத்தரகாண்டில் காங்கிரஸ்! – பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் கட்சிகள்!
- ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த நாங்க தயார்! – தேர்தல் ஆணையர்!
- உபி, உத்தரகாண்ட்டில் பாஜக முன்னிலை: மற்ற 3 மாநிலங்கள் நிலவரம் என்ன?
- 5 மாநில தேர்தல்: உபியில் பாஜக, சமாஜ்வாதி முன்னிலை
பஞ்சாப்பில் காங்கிரஸ் பின்னடைவு… ஆம் ஆத்மி முன்னிலை!
பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது.
காங்கிரஸ் பலமான கட்சியாக இருக்கும் மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று. ஆனால் இந்த முறை தேர்தலுக்கு முன்பாக அக்கட்சியில் பல குழப்பங்கள் எழுந்தன. முன்னாள் முதல்வர் பதவி விலகி பாஜகவோடு கூட்டணி வைத்தார். இதனால் காங்கிரஸின் பலம் குறைந்தது. இந்நிலையில் தேர்தலிக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டன.
அதை உறுதி செய்யும் விதமாக இப்போது தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்துள்ளன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 39 இடங்களில் முன்னிலை வகிக்க, இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 3 இடங்களில் முன்னிலை உள்ளது.
