1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. A Teacher abused 9th grade student

பள்ளி மாணவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய ஆசிரியர் கைது

பள்ளி மாணவி
செல்போனில் மாணவியை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டிய உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத் டிடி காலனியில் உள்ள மிகப் பிரபலமான சைதன்யா என்ற பள்ளியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் ரமேஷ் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிலையில் ரமேஷ் அந்த பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் சிலரை ஆபாசமாக படம்பிடித்து அதனை மாணவிகளிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இல்லையென்றால் இதனை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
 
இதனையடுத்து மாணவிகள் நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீஸார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
மனைவிக்கு வீட்டிலே பிரசவம் பார்த்த என்ஜினியர்