கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம் ! காங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக

election
Last Modified செவ்வாய், 21 மே 2019 (18:55 IST)
எக்ஸிட் போல் என்ற கருத்துக் கணிப்புகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மீடியாக்களும் வெளியிட்டன. அதில் 270 க்கு  மேற்பட்ட இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமென்று தெரிவித்தன.
இதனையடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள பாஜக தொண்டர்கள் பயங்கர் குஷியாகினர். இதனால் மகிழ்ச்சியைடைந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கவுள்ள கட்சிகளுக்கு விருந்துகொடுக்கவுள்ளதாக அறிவித்தார்.
 
இந்நிலையில் தற்போது வடமாநிலத்த்தில் உள்ள சில முக்கியமான தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் காங்கிரஸே அதிக பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.
bjp
ஏறக்குறைய நாட்டில் உள்ள பிரபலமான ஊடகங்கள் அனைத்தும் தங்கள் கருத்துக்கணிப்பில் பாஜக அதிக இடங்களைப் பிடித்து மீண்டும் மோடியே பிரதமராவார் என்று கூறிவந்த நிலையில் வட மாநிலங்களில் இன்று வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :