இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு – திமுக 14, அதிமுக 3 .. மீதி ?

Last Modified செவ்வாய், 21 மே 2019 (17:51 IST)
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.  இப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 இடங்களில் இரண்டுக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :