திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜனவரி 2025 (19:37 IST)

பெண்களை துரத்தி சென்ற திமுக கொடி உள்ள கார்! காரணம் இதுதானா? டிஜிபி அலுவலகம் கொடுத்த விளக்கம்!

Chennai ECR

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை ஆண் நபர்கள் இருந்த திமுக கொடி பொருத்திய கார் துரத்தி சென்ற விவகாரம் குறித்து டிஜிபி அலுவலகம் தற்போது புது விளக்கத்தை அளித்துள்ளது.

 

சென்னை ஈசிஆர் ரோட்டில் முட்டுக்காடு பகுதியில் இரவு நேரத்தில் பெண்கள் சென்ற காரை வழிமறித்து சில ஆண்கள் துரத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் துரத்தி வந்த ஆண்களின் காரில் திமுக கொடி இருந்ததை குறிப்பிட்டு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

 

இந்த விவகாரத்தில் அங்கு என்ன நடந்தது என போலீஸார் நடத்திய விசாரணை குறித்து தற்போது டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

 

அதன்படி, 25ம் தேதி நள்ளிரவு இரண்டு மணியளவில் சின்னி திலங்க் என்ற பெண்ணும், அவரது பெண் நண்பர்களும் முட்டுக்காடு பாலம் அருகே வந்தபோது இரண்டு கார்களில் சுமார் 7-8 நபர்கள் அவர்களை துரத்தி வந்துள்ளனர். இதனால் பீதியடைந்த அவர்கள் வேகமாக காரை ரிவர்ஸில் எடுத்து அவர்களிடம் இருந்து தப்பி சென்றுள்ளனர். அப்போதும் அந்த இரு கார்களும் அவர்களை துரத்தி வந்துள்ளன.

 

சின்னி திலங்க் அவரது வீட்டருகே வந்து காரை நிறுத்தியபோது துரத்தி வந்த நபர்கள் அவர்களது காரை சின்னி திலங்க் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். மேற்படி காரை இடித்து விட்டு நிற்காமல் சென்ற சின்னி திலங்கிடம் பேசி பிரச்சினையை தீர்க்கவே துரத்தி வந்ததாக கூறியுள்ளனர். ஆனால் இதை சின்னி திலங்க தரப்பு மறுத்துள்ளது.

 

இதுகுறித்து சின்னி திலங்க கானத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், அவர்கள் காரை பறிமுதல் செய்யவும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K