வாக்கு இயந்திரங்களில் மோசடி – டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் !

Last Modified செவ்வாய், 21 மே 2019 (16:20 IST)
எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.  தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக இருக்கின்றன. சற்றுமுன்னர் தேர்தலின் போது வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்று உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் 21 எதிர்க்கட்சி தலைவர்களும் புகாரளித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :