வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (14:22 IST)

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாதுவில் அணை கட்டப்படும்: சித்தராமையா

மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தால் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை உடனே கட்டப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா  தேர்தல் பிரச்சார மேடையில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டிய தீருவோம் என கர்நாடக முதல்வர் கூறி வரும் நிலையில் தமிழக அரசு அதை எப்படியும் தடுப்போம் என உறுதி கொண்டு வருகிறது.
 
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக, கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியின் முடிவை எதிர்த்து வருவது முரணாக இருக்கும் நிலையில் இன்று தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா மேகதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் அணை கட்டாததால் பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும் பெங்களூர் மக்கள் அனைவருக்கும் காவிரி நீர் கிடைக்க வழி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்

இதிலிருந்து தற்போதைய மத்திய அரசுதான் மேகதாது அணை கட்ட அனுமதிக்கவில்லை என்ற கருத்தை எடுத்து பாஜக தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது

Edited by Siva