செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (11:44 IST)

முதல்வர் பதவியிலிருந்து ஸ்டாலின் விலக வேண்டும்..! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

edapadi
போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல் முதல்வர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை என கூறி சட்டசபையில் இருந்து அதிமுக இன்று வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் போதை பொருள் விவகாரத்தில் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று தூத்துக்குடியில் 8 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் சிக்கியுள்ளதாக வரும் செய்திகள், இந்த விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் புரையோடிப் போயுள்ளதை மெய்ப்பிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கள்ளச்சாராயம், கஞ்சா, சிந்தெடிக் போதைப்பொருட்கள்- இவை தான் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள் என்று அவர் விமர்சித்துள்ளார்.

 
இனியும் இதே மெத்தனத்தில் இந்த விடியா அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் அவலத்திலே போய் நின்றுவிடும் என்றும் போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல்  ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்