குளிர்சாதன பெட்டி வெடித்துச் சிதறியதில் மாணவி பலி!

depika
Last Modified சனி, 29 டிசம்பர் 2018 (12:10 IST)
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி என்ற பகுதியில் வசித்து வந்தார் தீபிகா. அங்குள்ள ஒரு கல்லூரியில் இவர் பிடெக் முதலாமாண்டு படித்து வந்தார். தீபிகாவின் உறவினர் திருமணத்திற்கு வீட்டில் இருந்து அனைவரும் சென்று விட்டனர் ஆனால் தீபிகாவிற்கு செமஸ்டர் தேர்வுகள் இருந்ததால் அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த தீபிகாவுக்கு தாகம் எடுக்கவே குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக குளிர்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறியது.
 
இதனையடுத்து வீடு முழுவதும் கரும் புகைசூழ்ந்திருந்தது.’ வெடிக்கும்’ சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீபிகாவின் வீட்டை பார்த்த போது வீட்டில் இருந்து புகை வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 
 
சில நிமிடங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீபிகா வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால் புகையுடன் தீபிகா சடலமாக கிடந்துள்ளார்.
 
இதனியடுத்து தீபிகாவின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார்  அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குளிர்சாதனப் பெட்டி வெடித்ததற்கான காரணம் பற்றி போலீஸார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :