வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 டிசம்பர் 2018 (17:43 IST)

5 மாநில தேர்தல்: வாரி இறைத்த கோடிகள் எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக கடும் தோல்வியை சந்தித்தது. 
 
தற்போது நடந்து முடிந்த தேர்தல் குறித்த அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரூ.14 ஆயிரம் கோடி வரை செலவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
 
குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது ஓட்டுக்கு ரூ.500 கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் 50% வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கியுள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்யவும் தயாராக உள்ளனர் என்பது அப்பட்டமாக தெரிகிறது.