செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated: செவ்வாய், 17 ஜனவரி 2023 (18:53 IST)

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகல்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் ஷ்ரேயாஷ் ஐயர் விலகியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

தெலுங்கானா மா நிலல் ஹைதராபாத்தில் நாளை(18ஆம் தேதி)  முதல் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இன்டஹ் ஒரு நாள் தொடரில்  ரோஹித் சர்மா தலைமையிலான இந்தததிய அணியில்  ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார்.

அவருக்குப் பதில் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷன், கிராட் கோல், பரத், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரஜன் படிதார்,  வாசிங்கடன், ஷாபாஸ் அகமது, குல்தீப் யாதவ், சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.