புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (16:44 IST)

முதல்வர் மீது மிளகாய்பொடி வீசி தாக்குதல்: பெரும் பரபரப்பு

டெல்லியில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது மர்ம நபர் மிளகாய்ப் பொடி வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி தலைமைச் செயலகத்திற்கு வந்த முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அங்கிருந்த மக்களின் குறைகளை கேட்டறிந்துக் கொண்டிருந்தார். அப்போது நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை கெஜ்ரிவாலின் முகத்தை நோக்கி வீசினார். 
இதனால் திகைத்து போன பாதுகாவலர்கள் அந்த நபரை கைது செய்தனர். அந்த நபர் யார் என்றும் அவர் எதற்காக இதனை செய்தார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.