வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (12:21 IST)

உல்லாச மோகம்: 46 லட்சத்தை இழந்த 65 வயது தாத்தா.....

உல்லாச மோகத்தால் மும்பையில் 65 வயது முதியவர் ஒருவர் 45 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை குரார் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் இணையத்தை பார்த்துக்கொண்டிருந்த போது ஆபாச இணையதளத்தின் விளம்பரம் வந்தது. அந்த முதியவர் அந்த விளம்பரத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது இதில் நீங்கள் உறுப்பினராக இணைந்தால் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
 
இதையடுத்து அவர் தனது விவரத்தை பதிவு செய்தார். இப்பொழுது தான் பிரச்சனையே ஆரம்பம். முதியவரின் போன் நம்பருக்கு போன் செய்த பெண் ஒருவர், முதியவரை மயக்கும்படி பேசினார். 10 லட்சம் கொடுத்தால் ஒரு வருடத்திற்கு 3 அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என பேக்கேஜை கூறினார் அந்த பெண்.
 
இதனால் சபலமடைந்த முதியவர் அந்த பெண்ணின் கணக்கிற்கு பணத்தை போட்டார். தொடர்ந்து பல பெண்கள் அவருக்கு போன் செய்து கிட்டதட்ட 46 லட்சத்தை கரந்துள்ளனர் அந்த உல்லாச அழகிகள் கும்பல்.
 
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொடுமை என்னவென்றால் காவல் நிலையத்தில் புகார் அளித்த முதியவர், பணத்தை பறித்த அழகிகள் ஒரு முறை கூட பெண்களை உல்லாசத்திற்கு அனுப்பவில்லை புலம்பினாராம். போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து அந்த மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.