ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (08:56 IST)

மும்பைக்கு சென்ற ரஜினி; தமிழ்நாட்டுக்கு வந்த விஜய் – கோலிவுட் அரசியல் !

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதைப் போல கோலிவுட்டிலும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

தமிழகம் இப்போது அரசியல் பிரச்சாரங்களால் சூடு பிடித்துள்ளது. மக்களவைத் தேர்தலோடு 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருப்பதே இத்தகையக் கூடுதல் பரபரப்புக்குக் காரண்ம். தேர்தல் காலங்களில் அரசியலில் ஆர்வமாக இருக்கும் நடிகர்களை ஊடக உலகம் கூர்மையாகக் கவனிக்கும். அவர்தம் ரசிகர்களும் தங்களுடைய நடிகர் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்று உற்சாகமாகக் காத்திருப்பார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு அரசியல் களத்தில் இறங்கப்போவதாக எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ரஜினியும், விஜய்யும் முதல் இரு இடங்களில் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது தமது படங்களில் பிசியாக இருக்கின்றனர். விஜய் நடிக்கும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு 25 சதவீதத்திற்கும் மேல் முடிந்துள்ளது. ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இந்த படப்பிடிப்பு தொடர்பான அரசியல் பேச்சு ஒன்று கோடம்பாக்கத்தில் உலவிக்கொண்டிருக்கிறது.

ரஜினி தேர்தல் சமயம் என்பதால் எந்தவித அரசியல் சாயமும் தன் மீது இப்போது படக்கூடாது என்ப்தால் தனது படப்பிடிப்பை மும்பையில் வைத்திருக்கிறார். இதனால் திரை மறைவில் உழைக்கும் தமிழ் தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். ரஜினி படமென்றால் தொடர்ச்சியாக வேலை இருக்கும். சரியான நேரத்தில் கைக்கு சம்பளம் வந்துவிடும் என எதிர்பார்ப்பில் இருந்தவர்கள் இப்போது அவை அனைத்தும் மும்பையில் உள்ளவர்களுக்குதான் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

அதேபோல விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு வேலைக் கிடைக்க வேண்டுமென்பதால் படப்பிடிப்பைத் தமிழகத்திற்கே மாற்ற சொல்லிவிட்டார் விஜய் என ஒரு செய்தி பேசப்பட்டு வருகிறது. அதனால் ஒரு பெரியப் படம் கைவிட்டுப் போனாலும் மற்றொரு பெரியப்படம் கைக்கு வந்துள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.