செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (17:22 IST)

இனி படங்களுக்கு புதிய வகை தணிக்கை சான்றிதழ்! அதிரடி மாற்றங்களை செய்த மத்திய அரசு!

theatres

இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வாங்க வேண்டியது அவசியமாக உள்ள நிலையில் அதில் தற்போது சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளது மத்திய அரசு.

 

 

இந்தியாவில் பல மொழிகளிலும் பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த படங்களை திரையிட மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ்களை வழங்குகிறது. அதன் படி , U, A மற்றும் U/A ஆகிய மூன்று வகை சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

 

இதில் யூ சான்றிதழ் அனைவரும் பார்க்கக் கூடிய படம், ஏ சான்றிதழ் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க வேண்டிய படம் என வரையறுக்கப்பட்டுள்ளது. யூ/ஏ சான்றிதழானது பெற்றோர் அறிவுறுத்தலோடு குழந்தைகளும் பார்க்கலாம் என்ற அனுமதியை வழங்குகிறது.
 

 

தற்போது இந்த யூ/ஏ சான்றிதழில் 3 உட்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன்படி யூ/ஏ 7+ சான்றிதழ் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பார்க்கலாம் என்று அனுமதிக்கிறது. யூ/ஏ 13+ சான்றானது 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையும், யூ/ஏ 16+ சான்றிதழ் 16 வயதிற்கு மேற்பட்டோரை அனுமதிக்கும் வகையிலும் அறிமுகமாகிறது.

 

Edit by Prasanth.K