வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (14:11 IST)

ஆடியன்ஸ் தலைவலியுடன் வெளியேறும் வகையில் படமெடுப்பதா? ரசூல் பூக்குட்டி ஆதங்கம்..!

rasool
சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் பெரும்பாலான விமர்சனங்களில் "இசை மிகவும் சத்தமாக இருக்கிறது" என்றும், "தேவி ஸ்ரீ பிரசாத் மிக மோசமாக பின்னணி இசை அமைத்துள்ளார்" என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

கங்குவா படத்தின் ரீரிக்கார்டிங் இசையை எனக்கு ஒருவர் அனுப்பினார். அந்த ஒலி குறித்த விமர்சனத்தை பார்க்க வருத்தம் ஏற்பட்டது. எங்களுடைய கலையும் கலைத்திறனும் இரைச்சல் யுத்தத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. யாரை குற்றம் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. சவுண்ட் இன்ஜினியரையா? அல்லது கடைசி நேரத்தில் எண்ணற்ற திருத்தங்களை செய்ததா என்பது தெரியவில்லை," என அவர் கூறினார்.

"தியேட்டரில் இருந்து தலைவலியுடன் ஆடியன்ஸ் வெளியேறினால் எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ கிடைக்காது," என்றும் கூறியுள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற இந்திய திரை உலகின் முன்னணி ஒலிக்கலவை வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி இவ்வாறு கூறியிருப்பது கங்குவா படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

"சூர்யா உயிரை கொடுத்து நடித்துள்ளார். ஆனால் திரைக்கதையில் சொதப்பிய இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு பக்கம்," என்றால், "படத்தை மிக மோசமாக டேமேஜ் செய்ததில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு முக்கிய பங்கு உண்டு," என்றும் கூறப்பட்டு வருகிறது.


Edited by Siva