1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (13:07 IST)

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தையா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Jayam Ravi
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஜெயம் ரவி விவாகரத்துக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என தகவல் வெளியானது.  
 
ஜெயம் ரவி , ஆர்த்தி திருமணம் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்து, திருமணத்தை ரத்து செய்ய கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். ஆனால், இந்த விவகாரம் குறித்து தன்னிடம் ஆலோசனை செய்யாமல், ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என்று ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், ஜெயம் ரவி தாக்கல் செய்த விவாகரத்து மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இருவரும் சமரசம் செய்யும்விதமாக தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
 
இதனால், இன்று ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Mahendran