ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (10:03 IST)

அவர் சொன்னால் குழந்தைகள் கேட்க மாட்டார்கள்… ஷக்திமான் வேடத்தில் நடிக்க கண்டீஷன் போடும் முகேஷ் கன்னா!

இந்தியாவில் 1990கள் மற்றும் 2000களின் தொடக்கத்தில் மிகவும் பிரபலமாக இருந்த டிவி தொடர் சக்திமான். இந்தியில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் பல இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் புகழ் பெற்றது. அப்போதைய 90ஸ் கிட்ஸ் சக்திமான் காப்பாற்றுவார் என மாடியில் இருந்து குதித்த சம்பவங்களும் ஏராளம்.இந்த தொடரை முகேஷ் கண்ணா தயாரித்து, தானே சக்திமானாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சக்திமான் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா அறிவித்திருந்தார். ஆனால் கரோனா காரணமாக அந்த படம் தொடங்குவதில் தாமதமானது. மேலும் படத்தில் சக்திமானாக நடிக்கப் போகும் நடிகர் யார் என்பதும் இன்னும் உறுதியாகவில்லை.

ரண்வீர் சிங்கிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் ஒரு பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்ததால் அவரை நிராகரித்தார் முகேஷ் கன்னா. இப்போது மற்றொரு ஹீரோவான டைகர் ஷ்ராஃபையும் அவர் நிராகரித்துள்ளார். அதற்கான காரணமாக “அவர் இன்னமும் குழந்தைகள் மத்தியில் ஒரு குழந்தைதான். அவர் குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னால் ‘அவரை நீ உக்கார்’ என்று நிராகரித்துவிடுவார்கள். அவரது இமேஜ் இன்னும் அந்த நிலையில்தான் உள்ளது” எனக் கூறியுள்ளார்.