வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (15:59 IST)

விடாமுயற்சி படம் ஒரே நாளில் நடக்கும் கதை… அதனால் பல பிரச்சனைகள்.. ஸ்டண்ட் இயக்குனர் கொடுத்த அப்டேட்!

அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ள போதும், இதுவரை படக்குழு உறுதியாக ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் படம் குறித்து பேசியுள்ளார். அதில் “விடாமுயற்சி படம் ஒரே நாளில் நடக்கும் கதை.  காலையில் ஆரம்பித்து இரவில் முடிந்துவிடும். ஷூட்டிங்கின் போது ஏகப்பட்ட வானிலைப் பிரச்சனைகளை எதிர்கொண்டோம். ஆனாலும் நாங்கள் லொக்கேஷன்களை மாற்றாமல் அங்கேயே படமாக்கினோம்” எனக் கூறியுள்ளார்.