வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2019 (13:14 IST)

துக்க வீட்டில் குரங்கு செய்த வேலை!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ

கர்நாடகாவில் துக்க வீட்டில் அழுது கொண்டிருந்தவரை குரங்கு ஒன்று சமாதானப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் நார்கண்ட் பகுதியில் முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த உறவினர்களும், ஊர் பொதுமக்களும் அவரது வீட்டிற்கு வந்தனர். அவரது உடலுக்கு அருகே உறவினர்கள் சிலர் அழுதுகொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று, அழுதுகொண்டிருந்த ஒரு பெண் அருகே சென்று அவரது தோளில் கை வைத்து, சமாதானப்படுத்தியது. அவரது தலையை வருடி, அவரை கட்டிப்படித்து ஆறுதல்படுத்தியது. இதுகுறித்து பேசிய அந்த ஊர்மக்கள், இந்த குரங்கு எல்லா துக்க வீடுகளுக்கும் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்லும். இந்த குரங்கு எங்களில் ஒன்று என கூறினர்.
 
இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் இந்த குரங்கின் மனிதாபிமானத்தை பாராட்டி வருகின்றனர்.