1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (11:43 IST)

பிரச்சாரம் செய்த ஹர்திக் பட்டேலின் கன்னத்தில் அறைந்த இளைஞர்: வைரலாகும் வீடியோ

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தின் போராளியான ஹர்திக் பட்டேல் சமீபத்தில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் எம்.எல்.ஏஆக இருக்கும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மக்களவை தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
 
இந்த நிலையில் ஹர்திக் பட்டேல் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மேடையில் ஏறிய வாலிபர் ஒருவர் ஹர்திக் பட்டேலின் கன்னத்தில் பளாரென அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹர்திக் பட்டேல் அந்த வாலிபரை தட்டி கேட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அந்த வாலிபரை நையப்புடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
வாலிபர் ஒருவர் ஹர்திக் பட்டேலின் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது. அவர் யார், எதற்காக ஹர்திக் பட்டேலை தாக்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.