பணியில் இருந்த காவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு

MLA
Last Modified சனி, 9 ஜூன் 2018 (12:38 IST)
மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பணியில் இருந்த காவலரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உதயநகர் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ வான சம்ப்லால் தேவா, என்பவர் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
 
அப்போது காவல் நிலையத்தில் காவலுக்கு நின்ற சந்தோஷ் இவானாதி என்ற போலீஸ்காரர் எம்.எல்.ஏவை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ, காவலரை 2 முறை அறைந்துள்ளார். இந்த காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.
 
இதனையடுத்து பணியில் இருந்த காவலரை தாக்கிய குற்றத்திற்கான எம்.எல்.ஏ மீது இந்திய தண்டனைச் சட்டம் 353-  332 ஆகிய பிரிவுகளின்  கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸார் எம்.எல்.ஏ வை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :