வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜூன் 2018 (10:50 IST)

இந்துக்களுக்கு மட்டுமே பணியாற்றுவேன்: கர்நாடக பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றும் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால் வெறும் 38 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதஜ கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் பாஜக தலைமையும் தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி நெட்டிசன்களின் பிடியில் சிக்கியுள்ளார். கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பாசனகவுடா என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியபோது, 'தேர்தலில் நான் இந்துக்கள் வாக்குகளால் தான் வெற்றிபெற்றேன் என்றும், இஸ்லாமியர்களால் இல்லை என்றும், எனவே இந்துகளுக்கு மட்டுமே தான் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமியர்கள் என் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அனைத்து ஜாதி, மதம், இனங்களை உடையவர்களுக்கும் பொதுவானவர் என்ற அடிப்படை கூட தெரியாமல் இவ்வாறு அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அவருடைய தொகுதி மக்களை மட்டுமின்றி கர்நாடக மாநில மக்களையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.