செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 மார்ச் 2022 (09:04 IST)

சண்டை போட்ட மனைவி; குழந்தையை உயிருடன் புதைத்த கணவன்! – மகாராஷ்டிராவில் கொடூரம்!

மகாராஷ்டிராவில் மனைவி சண்டை போட்டதால் ஒரு வயது குழந்தையை உயிருடன் கணவனே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டம் வாடி வால்க் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஹூக்ஹி. இவருக்கு காவேரி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில்தான் மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் மூன்றுமே பெண் குழந்தையாக பிறந்ததால் சுரேஷ், காவேரி இடையே சண்டை நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சண்டை எல்லை மீறவே காவெரி குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பிறந்து ஒரு வயதே ஆன பெண் குழந்தையை காணவில்லை. இதுகுறித்து காவெரி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் சுரேஷ் குழந்தையை தானே குழி தோண்டி உயிருடன் புதைத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் சுரேஷை கைது செய்ததுடன், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.