1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (08:02 IST)

ராமர் கோவிலுக்காக தயாராகும் பிரமாண்டமான மணி: எத்தனை டன் எடை தெரியுமா?

ராமர் கோவிலுக்காக தயாராகும் பிரமாண்டமான மணி
பல ஆண்டுகளாக அயோத்தி ராமர் கோவில் விவகாரம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது
 
இதனை அடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தீவிர முயற்சி எடுத்தது. இதனை அடுத்து சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடந்தது என்பதும் இந்த பூஜையில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் இருந்து வெள்ளி செங்கல்கள் உள்பட செங்கல்கள் வரவழைக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது ராமர் கோவிலுல்காக பிரம்மாண்டமான மணி ஒன்று தயாராகி வருகிறது. இந்த மணியை உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மணி செய்யும் கலைஞர் ஒருவர் செய்து வருவதாகவும் வெண்கலத்தால் செய்யப்பட்டு வரும் இந்த மணியின் எடை மட்டும் 2.1 டன் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த மணி ராமர் கோவிலில் வைக்கப்பட்டால் உலகிலேயே மிகப்பெரிய மணிகளில் ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த மனித டிசைன்கள் விரைவில் சமூகவலைதளத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மணி ஒலித்தால் ஒரு சில கிலோ மீட்டர்களுக்கு அதன் ஒலி இருக்கும் என்றும் இந்த மணியை செய்துவரும் கலைஞர் தெரிவித்துள்ளார்