24 மணி நேரத்தில் 48,900 பேர்; கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை என்ன??

Sugapriya Prakash| Last Modified சனி, 8 ஆகஸ்ட் 2020 (10:15 IST)
இந்தியா முழுவதும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டாலும், தளர்த்தப்பட்டாலும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,95,41,219 ஆகவும், வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,25,44,480 ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,24,050 ஆகவும் உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,27,074லிருந்து 20,88,611 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.78 லட்சத்திலிருந்து 14.27 லட்சமாகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,585லிருந்து 42,518ஆக உயர்ந்துள்ளது. 
 
அதிலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :