வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (07:21 IST)

ஒருமணி நேரத்தில் டிரெண்டுக்கு வந்த ‘நீங்கள் இல்லாமல் நானில்லை’: பவர் ஆஃப் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர் பக்கத்தில் இருந்தாலும் அவர் கிட்டத்தட்ட மாதம் டுவீட் மட்டுமே பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு டுவிட்டும் ஒரு சில மணி நேரங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் தற்போது ’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்ற ஒரு டுவிட்டை நேற்று இரவு பதிவு செய்தார். நேற்றிரவு ரஜினிகாந்த் பதிவு செய்த டுவிட், ஒரு சில நிமிடங்களில் தமிழக அளவிலும், அதன் பின்னர் இந்திய அளவிலும் தற்போது உலக அளவிலும் அவரது டுவிட்டர் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக்குடன் ரஜினிகாந்த் பதிவு செய்த ட்விட்டரில் கூறியிருப்பதாவது: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.