செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (07:37 IST)

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றி வந்த விமானம் விபத்து: அதிர்ச்சி தகவல்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நோய் கட்டுப்படுத்தும் மருந்துகளில் ஒன்றாகரெம்டெசிவிர் மருந்து தரப்படுகிறது. இந்த மருந்தை ஒரு சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் மீது சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஆனால் அதே நேரத்தில் குணப்படுத்தச் சரியான மருந்து அல்ல என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமான நிலையத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்துகளை ஏற்றுக் கொண்டு வந்த விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது
 
இந்த விமானத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 2 விமானிகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர் இருப்பினும் விமானத்தில் இருந்த ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு எந்த விதமான சேதமும் இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த ரெம்டெசிவிர் மருந்து ஏற்றி வந்த விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது