வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (14:44 IST)

ரகசியம் கசிந்துவிடுமோ??? பெற்ற மகளை துடிதுடிக்க கொலை செய்த தந்தை

ரகசியம் கசிந்துவிடுமோ??? பெற்ற மகளை துடிதுடிக்க கொலை செய்த தந்தை
மகளின் காதல் விவகாரம் வெளியே கசிந்துவிடுமோ என பயந்து தந்தை மகளை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி. இவரது மகள் வைஷ்ணவி. வைஷ்ணவி தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
 
இந்நிலையில் வைஷ்ணவி தன்னுடன் படிக்கும் மாணவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் வெங்கட் ரெட்டிக்கு தெரிய வரவே அவர் வைஷ்ணவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் வைஷ்ணவி தந்தையின் பேச்சை கேட்காமல் அந்த வாலிபருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
ரகசியம் கசிந்துவிடுமோ??? பெற்ற மகளை துடிதுடிக்க கொலை செய்த தந்தை
மகளின் காதல் விஷயம் எங்கே வெளியே தெரிந்து தமக்கு அவமானமாகிவிடுமோ என அஞ்சிய வெங்கட், வைஷ்ணவியை கழுத்தை நெருக்கி கொலை செய்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கட்டை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.