1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (07:17 IST)

மகன் சினிமாவில், மகள் விளையாட்டில்: தளபதி விஜய்யின் மெகா திட்டம்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நிலையில் அவருடைய வாரிசுகள் இரண்டு துறைகளில் சாதனை செய்து வருகின்றனர்.

விஜய் மகன் சஞ்சய் திரைத்துறையில் இயக்குனர், குறும்படம், நடிப்பு, பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என சென்று கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் மகள் சாஷா பேட்மிண்டன் விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றார்.

சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் விஜய்யின் மகள் சாஷா, அந்தப் பள்ளியின் பாட்மிண்டன் குழுவில் முக்கிய வீராங்கனையாக இடம்பெற்றுள்ளதாகவும், சாஷா குழு சமீபத்தில் நடந்த போட்டிகளில் பங்கு பெற்று 3வது இடத்தை பெற்றுள்ளதாகவும், பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுளது. மகனை சினிமாத்துறையிலும், மகளை பேட்மிண்டன் துறையிலும் பெரிய ஆளாக்க தளபதி விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.