செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 பிப்ரவரி 2019 (13:53 IST)

ஒரு வாரத்துல கல்யாணத்த வெச்சுட்டு போட்டோவை வெளியிட்ட ரஜினி மகள்

இன்னும் ஒரு வாரத்தில் மறுமணம் நடைபெற உள்ள நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.
 
தமிழ் சினிமாவின் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த். இவருக்கு சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். மேலும்,சௌதர்யா  2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  
 
அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை மறுமணம் செய்யவுள்ளார். 
 
இவர்களின் திருமணம் வரும் 11ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது
 
இந்நிலையில் சௌதர்யா டிவிட்டர் பக்கத்தில் புடவை அணிந்துகொண்டு, திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலர் அவருக்கு வாழ்த்துக்களை சொன்ன வண்ணம் இருக்கின்றனர்.