புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (13:17 IST)

பொள்ளாச்சி கொடூரம் நடக்காமல் தடுக்க வாட்ச்மேன் படக்குழு செய்த வேலை!

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூரம் இனியும் நடக்காமல் தவிர்ப்பதற்கு வாட்ச்மேன் படக்குழுவினர் செய்த வேலை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
 
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை உருவாக்கும் இயக்குனர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்  ஏ.எல்.விஜய். இவர் தற்போது  ஜி.வி.பிரகாஷ் வைத்து வாட்ச்மேன் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் புரூனோ என்ற நாய் படம் முழுக்க வந்து கலக்குகிறது. முதலாளியை காப்பாற்ற அந்த நாய் போராடும் மிரட்டலான கதையாக "வாட்ச்மேன்" படம் உருவாகியுள்ளது
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் , பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த உதவி செய்யும் வகையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் படக்குழு சார்பில், 50 சிசிடிவி கேமராக்கள் போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பொள்ளாச்சி நகரின் முக்கிய இடங்களில் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த உதவிகரமாக இருக்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இப்படக்குழுவினரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.