திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (13:13 IST)

கிச்சனில் சிக்கன் சமைத்த கணவன்: கடுப்பான மனைவி: கடைசியில் நடந்த கொடூரம்...

உத்திரபிரதேசத்தில் கணவன் சிக்கன் சமைக்க சொன்னதால் மனைவி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
உத்திரபிரதேசம் பேரேலியை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி இரு மகன்கள் ஒரு மகன் உள்ளனர். இரு மகன்கள் படிப்பை முடித்து வேலையில் இருக்கின்றனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் இருக்கிறார்.
 
இந்நிலையில் குடிப்போதையில் வீட்டிற்கு வந்த அந்த நபர் இறைச்சி சமைக்குமாறு மனைவியிடம் கேட்டுள்ளார். தாம் விரதம் இருப்பதால் இறைச்சி சமைக்கமாட்டேன் என மனைவி கூறியுள்ளார். இதனால் கிச்சனுக்கு சென்ற அந்த நபர் தாம் வாங்கி வந்த இறைச்சியை தாமே சமைக்க ஆரம்பித்துள்ளார்.
 
இதனால் மனவேதனையடைந்த மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்த அந்த நபர், மனவேதனையில் தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.