தொடர்புடைய செய்திகள்
- வாட்ஸ் ஆப் சேட்டையால் எரித்துக் கொல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்
- பாஜக கூட்டணியிலிருந்து விலகினால் எங்கள் ஆதரவு கிடைக்கும்; விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
- கொட்டாவி விட்டது தப்பா? மாணவனை புரட்டி எடுத்த ஆசிரியை மீது வழக்கு
- பச்சிளம் குழந்தையை துடிதுடிக்கக் கொன்ற தாய் - அதிர்ச்சியூட்டும் காரணம்
- பச்சிளம் குழந்தையை துடிதுடிக்கக் கொன்ற தாய் - அதிர்ச்சியூட்டும் காரணம்
மாநகராட்சி மேயரான ஆட்டோ டிரைவர்
மகாராஷ்டிராவில் ஆட்டோ டிரைவர் ஒருவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று மாநகராட்சி மேயராக பொறுப்பேற்க உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சியில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் ஆட்டோ டிரைவரான ராகுல் ஜாதவ் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் வினோத் நாதே போட்டியிட்டார்.
இத்தேர்தலின் முடிவில் ராகுல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வினோத் நாதேவை 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதுகுறித்து பேசிய ராகுல், நான் ஒரு ஆட்டோ டிரைவர் எனக்கு மக்களின் பிரச்சனை அனைத்தும் தெரியும். எனவே அவர்களின் நலனுக்காக பாடுபடுவேன். நகர வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பேன் என்றார்.
