1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜூன் 2018 (09:20 IST)

பச்சிளம் குழந்தையை துடிதுடிக்கக் கொன்ற தாய் - அதிர்ச்சியூட்டும் காரணம்

மகாராஷ்டிராவில் ஒரு பெண் தனக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று நினைத்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததனால் அதனை அவரது தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஆருங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேதிகா எர்னாடே. இவருக்கு திருமணமாகி அரு ஆண் குழந்தை உள்ளது.
 
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான அவர், தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என எண்ணியிருந்தார். ஆனால் அவருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ஆத்திரமடைந்த வேதிகா பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல் அதனை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து துடிதுடிக்கக் கொன்றுள்ளார்.
 
பின்னர் ஒன்றும் தெரியாததுபோல, காவல் நிலையத்திற்கு சென்று தனது குழந்தையை காணவில்லை எனப் புகார் அளித்தார். போலீஸாருக்கு வேதிகாவின் நடவடிக்கையில் சந்தேகம் வரவே அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். இறுதியில் வேதிகா உண்மையை ஒப்புக் கொண்டார்.
 
இதனையடுத்து போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேதிகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.