வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (16:14 IST)

பாஜக கூட்டணியிலிருந்து விலகினால் எங்கள் ஆதரவு கிடைக்கும்; விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்போம் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

 
பாஜக தலைமையிலான மத்திய மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளில் சிவசேனா பங்குபெற்றுள்ளது. ஆனாலும் தற்போது சிவேசேனா பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. 
 
உத்தவ் தாக்கரே, 2019 பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநில தேர்தல்களில் தனியாக போட்டியிடுவோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவசேனா, பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் நாங்கள் ஆதரவளிப்போம் என மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராஜூ செட்டி கூறியதாவது:- 
 
பாஜக கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகினால் நாங்கள் அவர்களுடன் கைகோர்ப்போம். சிவசேனா கிராமபுறங்களிலும், நகர்புறங்களிலும் காலூன்ற எங்களுடைய இயக்கம் மிகவும் ஆதரவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.