வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (11:13 IST)

கடவுள் ராமருக்கு தங்க காலணி..! 8 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரையாக அயோத்தி செல்லும் பக்தர்..!!

golden shoe
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (வயது 64) அயோத்திக்கு பாதயாத்திரையாக செல்கிறார். கடவுள் ராம பக்தரான ஸ்ரீனிவாஸ் ஐதராபாத்தில் இருந்து ஒடிசா, மராட்டியம், குஜராத் வழியாக 8 ஆயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரையாக அயோத்தி செல்கிறார்.

பாதயாத்திரையின்போது கடவுள் ராமருக்கு தங்க காலணிகளையும் ஸ்ரீனிவாஸ் கொண்டு செல்கிறார். 65 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க காலணிகளை ஸ்ரீனிவாஸ் கடவுள் ராமருக்கு காணிக்கையாக கொண்டு செல்கிறார்.
 
கடந்த ஜூன் மாதம் 20 தேதி தனது பாதயாத்திரையை தொடங்கிய ஸ்ரீனிவாஸ், பல்வேறு நகரங்களை கடந்து அயோத்தியை நெருங்கியுள்ளார். ஸ்ரீனிவாஸ் அயோத்தியை அடைய சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அவர் வரும் 16ம் தேதி அயோத்தி சென்றடைகிறார். அயோத்தி சென்றடையும் ஸ்ரீனிவாஸ் கடவுள் ராமருக்கு காணிக்கையாக கொண்டுவந்த தங்க காலணிகளை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்குகிறார்.