வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:55 IST)

“கடவுள் பாத்துகிட்டு இருக்கார்…” சிவகார்த்திகேயன் பற்றிய கேள்விக்கு இமான் பதில்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் சில தினங்களுக்கு முன்னர் அளித்த ஒரு  நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகம் ஒன்றை தனக்கு செய்துள்ளதாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். அதில் “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை. அடுத்த ஜென்மத்தில் அவர் ஹீரோவாக இருந்து நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.

அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். இது பற்றி நான் கேட்ட போது அவர் சொன்ன பதிலை இங்கு சொல்லவே முடியாது. அவர் செய்ததை சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். அதனால் என்னால் சொல்லமுடியாது” என ஆதங்கத்தோடு கூறியிருந்தார்.

இமானின் இந்த பேட்டி வைரல் ஆனதை அடுத்து சிவகார்த்திகேயன் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இமானிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் “சிவகார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் இடையிலான சர்ச்சை பற்றி ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள்” எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்த இமான் “நான் எதுவும் பேசப்போவதில்லை. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.” எனக் கூறி விடைபெற்றார்.