தொடர்புடைய செய்திகள்
- நான்கு கதாநாயகிகள் நடிக்கும் பேய்க்கதை – கருங்காப்பியம் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
- காசேதான் கடவுளடா ரீமேக்கில் சிவாங்கி!
- அசோக் செல்வன் நடித்துள்ள சில நேரங்களில் சில மனிதர்கள் டீசர் வெளியீடு!
- ராம்சரண் & ஷங்கர் படத்தின் வில்லன் இவர்தானாம்
- வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்!
கிணற்றில் விழுந்த குழந்தை… வேடிக்கைப் பார்த்த 8 பேர் மரணம்!
மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி நடந்த போது அதை வேடிக்கப்பார்த்த மக்கள் கிணற்றில் விழுந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நேற்று முன்தினம் சிறுமி ஒருவர் 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்துள்ளார். அதனால் அப்பகுதி மக்கள் அந்த கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையடுத்து கிணற்றை சுற்றி மக்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். இதனால் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து 30 பேர் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.
இதையடுத்து பதற்றம் அதிகமாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதமாக செய்யப்பட்டன. இதில் 8 பேர் பலியாக, மற்றவர்கள் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
